வல்லோன் பெருமை பாடிடுவோமே
வல்லோன் பெருமை பாடிடுவோமே
அறிவுடன் நேசமும் பெற்றிடுவோம்
தூக்கிய கல்வி ஒளியதனை

துன்பம் போக கற்றிடுவோம்
ஊக்கமும் உயர்வும்
உண்மையும் பேசி
தீக்குணமோட்டி செல்வோம் வெல்வோம்
வல்லோன் பெருமை வாழ்த்திடுவோமே
கல்வியில் வெல்லும் கருத்தாவோம்
உடமையில் எங்கள் உயிராவோம்
ஊக்கமயாடி வென்றிடுவோம்
அண்ணலின் வழியும்
வேண்டியே வாழ்வோம் செல்வோம் வெல்வோம்
வல்லோன் பெருமை பாடிடுவோமே
போற்றிடுவோம் நல்வாக்கியமே
நித்திலம் புகழ்வது நம்மிடமே
தேசம் சிறப்பது நம் மனமே
வாழ்வினில் உயர
நல்வகழியினில் செல்வோம்
வல்லவனே கல்வி தாராய் தாராய்
வல்லோன் பெருமை பாடிடுவோமே